100 நாட்களை கடந்துவிட்டது `பிக் பாஸ் சீசன் 8′.
ஆனால், இந்த சீசனின் இந்த ஆட்டத்தில் சில டிவிஸ்ட்களை பிக் பாஸ் சேர்த்திருக்கிறார். அதுவும் ஒரு பணப்பெட்டி அல்ல, பல பணப்பெட்டிகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியே தூரத்தில் வைக்கப்படும். அதை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்புபவர் போட்டியில் தொடரலாம் என புதிய விஷயம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிக் பாஸ். நேற்றைய எபிசோடில் முத்துக்குமரன் விரைந்துச் சென்று 50,000 ரூபாய் மதிப்புள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டாவதாக பணப்பெட்டி இன்றைய எபிசோடில் வைக்கப்பட்டிருக்கிறது. 45 மீட்டர் தூரத்திலிருக்கும் அந்தப் பெட்டியை 25 விநாடிகளுக்குள் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வரவேண்டும். தவறினால், போட்டியாளரின் கேம் அங்கேயே முடிவை எட்டிவிடும். இன்று ரயான் ஒப்புக் கொண்டு களத்தில் இறங்கி விரைந்து ஓடி அதை எடுக்க முயன்றிருக்கிறார். ரயன் பணப்பெட்டியை எடுத்தாரா? மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியை தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…