ரஷியா: ராணுவ தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்

கியேவ்,

ரஷியாவின் ராணுவ தளங்கள் (ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் இடங்கள்) மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சுமார் 3 ஆண்டுகளாக இந்த பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ரஷியாவின் ராணுவ தளங்கள் (ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் இடங்கள்) மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.200 கி.மீ. முதல் 1100 கி.மீ. வரை ரஷியாவின் உட்பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிரையன்ஸ்க், சரடோவ், டுலா மாகாணங்களில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. சரடோவ் மாகாணத்தில் உள்ள ஏங்கல்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சேகரித்து வைக்கும் கிரிஸ்டால் நிலையம் மீது தாக்குதல். பிரையன்ஸ்க் மாகணத்தின் செல்ட்சோவில் உள்ள லைப்ஸ்டைல் தொழில்நுட்பம் பிரையன்ஸ்க் கெமிக்கல் நிலையம் மீது தாக்குதல் (இது ராக்கெட், குண்டுகள் தயாரிப்தற்கான வெடிப்பொருட்களை தயாரிக்கும் வசதி கொண்ட நிலையம்)சரடோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையம், கசனோர்க்சின்டெஸ் நிலையம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ராணுவ வசதிகள் அழிக்கப்படுவது தொடர்கிறது. உக்ரைனுக்கு மகிமை எனத் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.