மதுரை: பொங்கலையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இன்று மாலை நிறைவடைந்தது. இந்த போட்டியில் 44 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் நாளான (ஜனவரி 14) அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க களமிறங்கினர். […]