3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்

வாஷிங்டன்,

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.மேலும் அவர்களுக்கு பதில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒரு பணியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான போதிய இழப்பீடும் அளிக்கப்படும். ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம். 5 சதவீதம் என்பது தற்போது நிறுவனத்தில் உள்ள 72,000 பேரில் 3,600 ஊழியர்கள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.