சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான அனுமதிக்காக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஊழல் தடுப்புப்பிரிவினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சட்டவிரோத […]