கோவளம் சுற்றுலா ஹெலிகாப்டர் தளத்துக்கு 'சீல்' – காரணம் என்ன?

கோவளம்: ஹெலி​காப்டர் தளத்​துக்கு சீல் வைக்​கப்​பட்​டது. அனுமதி பெற்று மீண்​டும் ஹெலி​காப்டர் சவாரி சுற்றுலா​வைத் தொடர வருவாய்த் துறை நோட்​டீஸ் அளித்​துள்ளது.

கோவளத்​தில் தனியார் நிறு​வனம் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஹெலி​காப்டர் சவாரி சுற்றுலா தொடங்​கப்​பட்​டது. பின்னர் திடீரென ஹெலி​காப்டர் சுற்றுலா சவாரி நிறுத்​தப்​பட்​டது. இந்நிலை​யில் இந்த சவாரி சுற்றுலா கடந்த 10ம் தேதி மீண்​டும் தொடங்​கியது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 மீட்டர் உயரத்​தில் பறந்து 5 நிமிடத்​துக்கு ஹெலி​காப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது. கிழக்கு கடற்கரை சாலை​யில் உள்ள இயற்கை காட்​சிகளை கழுகு பார்​வை​யில் மக்கள் கண்டு​களித்​தனர்.

இந்நிலை​யில், மாவட்டம் நிர்​வாகம் உள்ளிட்ட முறையான அனுமதி, பாது​காப்பு வழிமுறை கள் இல்லாமல் செயல்​படு​வ​தாக, ஆட்சி​யருக்கு திருப்​போரூர் எம்எல்ஏ பாலாஜி புகார் கடிதம் அனுப்​பினார். இதையடுத்து, மாவட்ட நிர்​வாக உத்தர​வின்படி நேற்று திருப்​போரூர் வட்டாட்​சியர் நடராஜன் தலைமை​யில் கேளம்​பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்​கடேசன் முன்னிலை​யில் வருவாய் துறை அதிகாரிகள் கோவளம் ஹெலி​காப்டர் தளத்​துக்கு வந்து சீல் வைத்​தனர். அதன் அலுவல​கத்​தில் அறிவிப்பு நோட்​டீஸ் ஒன்றை​யும் ஒட்டி​யுள்​ளனர்.

அந்த நோட்​டீஸில் தெரி​வித்​திருப்​ப​தாவது: ஏரோ டான் என்ற நிறு​வனம் ஹெலி​காப்டர் சுற்றுலா என்ற பெயரில் ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரை ஹெலி​காப்டர் மூலம் பொது​மக்களை கோவளம் முதல் மாமல்​லபுரம் வரை ஏற்றி செல்வது கண்டறியப்​பட்​டது. இந்நிறு​வனம் அரசு மற்றும் மாவட்ட நிர்​வாகத்​தால் உரிய அனுமதி பெற்​றதற்கான ஆவணங்கள் ஏதும் சமர்ப்​பிக்கத் தவறிய​தால், இந்த ஹெலி​காப்டர் சுற்றுலா​வால் எவ்வித அசம்​பாவித நிகழ்வு நடக்​காமலும், பொது​மக்கள் பாது​காப்பு நலன் கருதி​யும் ஹெலி​காப்டர் சேவையை நிறுத்தி வைக்க கேட்டுக் கொள்​ளப்​படு​கிறது. மேற்படி நிறு​வன​மானது அரசு மற்றும் மாவட்ட நிர்​வாகத்​தின் அனுமதி பெற்று இயங்க இதன் மூலம் தெரிவிக்​கப்​படு​கிறது. இவ்வாறு நோட்​டீஸில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்து திருப்​போரூர் தாசில்​தார் நடராஜனிடம் கேட்​ட​போது, “முறையான மாவட்ட நிர்வாக அனுமதி ஏதும் பெறப்​பட​வில்லை. பொது​மக்களை ஏற்றிச் செல்​லும்​போது ஏதாவது அசம்​பா​விதம் ஏற்பட்​டால் அதற்கு மாவட்ட நிர்​வாகம் பொறுப்​பாகும். எனவே மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி சீல் வைக்​கப்​பட்​டது. ஆனால் ஹெலி​காப்டர் இயக்​கும் நிர்​வாகத்​தினர் அனுமதி பெற்று இருப்​பதாக கூறுகின்​றனர். அவ்வாறு அனுமதி பெற்று இருந்​தால் அதனைக் கொண்டு வந்து காண்​பிக்க வேண்​டும் என்று கூறி​யிருக்​கிறோம்” என்றார்.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: ஹெலி​காப்டர் சுற்றுலா செல்​வதற்காக பயணிகள் முன்​ப​திவு செய்து இருந்​தனர். நேற்று சீல் வைக்​கப்​பட்டு சேவை நிறுத்​தப்​பட்​ட​தால், பயணி​கள் ஏ​மாற்​றத்​துடன் ​திரும்பி சென்​றனர். ​முன்​ப​திவு செய்​தவர்​களுக்கு கட்​ட​ணம் ​திரும்பி வழங்​கப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.