சென்னை: தமிழ்நாட்டில் வரும் 18ந்தேதி திமுக சார்பில் சட்டத்துறை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி, சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மூத்த வழக்கறிஞர் கபில்சிவல், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை சார்பில் 3-வது மாநில மாநாடு வருகிற 18-ந் தேதி ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு காலை 7மணி […]