ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: டிக்கெட் விலை அறிவிப்பு – முழு விவரம் இதோ!

ICC Champions Trophy 2025: சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றும் 7 ஆண்டுகள் ஆகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என 8 அணிகள் விளையாட உள்ள இத்தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 

கடைசி நடைபெற்ற 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் டிராபியை வென்றதால் நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான் அணி களம் காண்கிறது. 

சாம்பியன்ஸ் டிராபி 2025: டிக்கெட் விலை

அடுத்த மாதம் 19ஆம் தேதி இத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை அறிவித்துள்ளது. 

அதன்படி பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.620-வும், அதிகபட்ச டிக்கெட் விலையாக (Gallery Tickets) ரூ.7720 வரை நியமிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பாகிஸ்தான் அல்லாத போட்டிகளுக்கு குறைந்தபட்ச விலையாக 350 ரூபாயும் அதிகபட்ச விலையாக (Gallery Tickets) 5580 ரூபாய் வரை நியமிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிங்க: “அவர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்”.. BGT குறித்து ரவி அஷ்வின்!

மைதானம் வாரியாக டிக்கெட் விலை விவரம்

கராச்சி மைதானம்

பொது நுழைவு கட்டணம்: ரூ.620 (பாக். போட்டிகள்), ரூ.310(பாக். அல்லாத போட்டிகள்)

முதல் வகுப்பு: ரூ.1240 (பாக். போட்டிகள்), ரூ.465 (பாக். அல்லாத போட்டிகள்)

பிரீமியம்: ரூ.2170 (பாக். போட்டிகள்), ரூ. 1085 (பாக். அல்லாத போட்டிகள்)

விஐபி(VIP):ரூ.3720 (பாக். போட்டிகள்), ரூ.2170 (பாக். அல்லாத போட்டிகள்)

கேலரி: ரூ.7750 (பாக். போட்டிகள்), ரூ.5580 (பாக். அல்லாத போட்டிகள்)

லாகூர் மைதானம்

பொது நுழைவு: ரூ.310 (ஆஸ் vs இங்கி/ஆப். போட்டிகள்), ரூ.775 (அரை இறுதி)

முதல் வகுப்பு: ரூ.620 (ஆஸ் vs இங்கி), – (ஆப். போட்டிகள்), ரூ.1395 (அரை இறுதி)

பிரீமியம்: ரூ.1550 (ஆஸ் vs இங்கி), ரூ.620 (ஆப். போட்டிகள்), ரூ.2170 (அரை இறுதி)

விஐபி: ரூ.2320 (ஆஸ் vs இங்கி), ரூ.1860 (ஆப். போட்டிகள்), ரூ.3720 (அரை இறுதி)

விவிஐபி(VVIP): ரூ.3720 (ஆஸ் vs இங்கி), ரூ.2480 (ஆப். போட்டிகள்), ரூ.5580 (அரை இறுதி)

கேலரி: ரூ.5580 (ஆஸ் vs இங்கி), ரூ.3880 (ஆப். போட்டிகள்), ரூ.7750 (அரை இறுதி)

ராவல்பிண்டி மைதானம்

பொது நுழைவு கட்டணம்: ரூ.620 (பாகிஸ்தான் vs வங்கதேசம்), ரூ.310 (பிற போட்டிகள்)

முதல் வகுப்பு: ரூ.1240 (பாகிஸ்தான் vs வங்கதேசம்), ரூ.465 (பிற போட்டிகள்)

பிரீமியம்: ரூ.2170 (பாகிஸ்தான் vs வங்கதேசம்), ரூ.930 (பிற போட்டிகள்)

VIP: ரூ.3880 (பாகிஸ்தான் vs வங்கதேசம்), ரூ.1550 (பிற போட்டிகள்)

கேலரி: ரூ.5580 (பாகிஸ்தான் vs வங்கதேசம்), ரூ.3100 (பிற போட்டிகள்)

துபாயில் நடைபெறும் இந்திய போட்டிகள் 

இந்தியாவுக்கான போட்டிகள் துபாயில் பிப். 20, 23 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பாரா இந்த ஸ்டார் பவுலர்? பிசிசிஐ ரியாக்ஷன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.