மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் 50க்கும் மேலான மாணவிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாக 47 வயது சைக்காலஜிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தில் ஈடுபட்ட நபரின் பெயரைச் சட்ட மற்றும் சமூக காரணங்களுக்காக மறைத்துள்ளனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய தனது பதவியைப் பயன்படுத்தி இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் அந்த நபர்.
இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க, துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் நாக்பூர் காவல் ஆணையர் ரவிந்தர் சிங்கல். இந்த குழுவில் குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
காவல்துறையினர் கூறுவதன்படி, கைது செய்யப்பட்ட நபர் தனியாக கிளினிக் நடத்தியுள்ளார். அங்கு இளம் பெண்களுக்கு (குழந்தைகள் உட்பட) ஆலோசனை வழங்குவதாகவும் தனிப்பட்ட வளர்ச்சிக்குப் பயிற்சி அளிப்பதாகவும் காட்டிக்கொண்டு பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.
குற்றவாளி மீது போக்சோ, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்பு சட்டம் உட்பட 3 சட்டங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சைக்காலஜிஸ்ட்டிடம் பயிற்சி பெற்ற 27 வயது முன்னாள் மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தான் படிக்கும் காலத்திலிருந்து இன்றுவரை தன்னைப் பாலியல் ரீதியாகச் சுரண்டி, தனது புகைப்படங்களைக் கொண்டு மிரட்டி வருவதாகக் கூறியுள்ளார்.
திருமணம் ஆகியிருக்கும் இந்த மாணவியின் கணவரும் துணையாக இருந்ததால் துணிச்சலாகப் புகார் அளித்து நீண்ட நாட்களாக நடந்துவரும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் பிற பாதிக்கப்பட்ட பெண்களையும் தொடர்பு கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளைக் கூற மறுத்துள்ளனர். காவல்துறைக்குத் தெரிவிப்பதன் மூலம் குடும்பம் சமூக பின்னணியில் ஏற்படும் விளைவுகளுக்காக அஞ்சுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs