ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், 300 யூனிட் மின்சாரம் இலவசம் – டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்​லி​யில் ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்​கு காஸ் சிலிண்​டர், வீடு​களுக்கு 300 யூனிட் இலவச மின்​சாரம் வழங்​கப்​படும் என்று காங்​கிரஸ் கட்சி தேர்தல் வாக்​குறுதி அளித்​துள்ளது.

டெல்லி சட்டப்​பேர​வை​யில் 70 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்​ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்​தலில் இண்டியா கூட்​ட​ணி​யில் அங்கமாக இருக்​கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனித்​துப் போட்​டி​யிடு​வதாக அறிவித்து​விட்​டது. அதனால் டெல்லி தேர்​தலில் ஆம் ஆத்மி – காங்​கிரஸ் – பாஜக ஆகிய 3 கட்சிகளின் மும்​முனை போட்டி ஏற்பட்​டுள்​ளது.

இந்நிலை​யில், தேர்தல் வாக்​குறு​தி​களாக இந்த கட்சிகள் இலவச திட்​டங்களை அறிவித்து வருகின்றன. காங்​கிரஸ் கட்சி சார்​பில் நேற்று 2 முக்கிய தேர்தல் வாக்​குறு​திகள் வழங்​கப்​பட்டன. டெல்​லி​யில் நடைபெற்ற பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பில் டெல்லி மாநில காங்​கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் மற்றும் தெலங்​கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட முக்கிய காங்​கிரஸ் பிரமுகர்கள் தேர்தல் வாக்​குறு​திகளை வெளி​யிட்​டனர்.

அதில், டெல்​லி​யில் காங்​கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்​கப்​படும். வீடு​களுக்கு 300 யூனிட் இலவச மின்​சாரம் வழங்​கப்​படும் ஆகிய 2 வாக்​குறு​திகளை வழங்​கினர். இதுகுறித்து காங்​கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “டெல்​லி​யில் ஆட்சிக்கு வந்தால் ‘பணவீக்க நிவாரண திட்​டம்’ செயல்​படுத்​தப்​படும். அதில் ரூ.500-க்கு காஸ் சிலிண்​டர், ஒவ்வொரு குடும்பத்​துக்​கும் இலவச உணவு தானிய ‘கிட்’ வழங்​கப்​படும். இரண்​டாவதாக இலவச மின்​சார ​திட்​டத்​தின் கீழ் 300 யூனிட் வழங்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.