ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: ஜெகதீப் தன்கர்

ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: குரு காசிதாஸ் ஒற்றுமை மற்றும் சமத்துவ உணர்வின் உருவகமாக திகழ்ந்தார். இவரைப் போன்ற குருமார்களால்தான் இந்த பகுதியின் சமூக-கலாச்சார தன்மை மாறாமல் இருக்கிறது. மகரிஷி வால்மீகி, பகவான் பிர்சா முண்டா, ரவி தாஸ் மற்றும் ஜோதிபா புலே உள்ளிட்ட புகழ்பெற்ற நபர்கள் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் சமூகக் கட்டமைப்பின் தூணாக நிற்கிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கங்கள், சிந்தனைகளை சீர்குலைக்கும் வகையில் சிலர் ஆசை வார்த்தைகளைக் கூறி மதமாற்ற செயலில் ஈடுபடுகின்றனர். இது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த செயல் நமது நாகரிக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது. இதுபோன்ற தீய நோக்கங்களை நாம் கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும், ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.