ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், முற்பகல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தநிலையில், மதிய வேளையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2021ல் நடைபெற்ற […]