GV Prakash: `அப்பா நீ எங்க இருக்க?' – ஜி.வியை ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகள் அன்வி | க்யூட் மொமென்ட்

ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் `கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி பேசப்பட்டது.

இந்த `கிங்ஸ்டன்’ திரைப்படத்தை தயாரித்திருப்பதும் ஜி.வி. பிரகாஷ்தான். இதனை தாண்டி செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் `மென்டல் மனதில்’ திரைப்படத்தையும் ஜி.வி தயாரித்து வருகிறார். ஆதலால், இந்தாண்டு இவர் தயாரித்திருக்கும் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இது குறித்து ஜி.வி. பிரகாஷ் விகடனுக்கு அளித்த பேட்டியில், “மதயானை கூட்டம் திரைப்படத்துல என்னுடைய பெயர்லதான் பேனர் இருந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு நான் தயாரிப்பாளர் கிடையாது. எங்க அப்பாவும் இன்னொருவரும்தான் தயாரிப்பாளர். இப்போ தயாரிப்பாளராக என்னுடைய பெயர் இந்த `கிங்ஸ்டன், மென்டல் மனதில்’ திரைப்படங்கள்லதான் வரப்போகுது. இந்த வருடம் தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கேன். நான் இந்த விஷயத்தை பணம் சம்பாதிக்கணும்னு நோக்கத்தோட பண்ணவே இல்ல. அந்தப் படம் என்னென்ன விஷயம் கொடுக்கப்போகுது மக்களுக்கும் இயற்கைக்குதான் தெரியும். நான் ஒரு பேரார்வத்தோடதான் இந்தப் படங்களை தயாரிச்சிருக்கேன். ” எனப் பேசியிருக்கிறார்.

GV Prakash with his daughter

ஜி.வி. பிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய மகள் அன்வி காணொளிக்குள் க்யூட்டாக என்ட்ரிக் கொடுத்தார். ஜி.வி. பிரகாஷ் பேசும் ஒலியை கேட்ட அன்வி மேல் தளத்திலிருந்து “அப்பா…நீ எங்க இருக்க?” எனக் கேட்டார். அதற்கு ஜி.வி-யும் `இங்கதான் இருக்கேன்’ எனப் பதிலளித்தும் `ஓகே, வந்துடுறேன்!’ என ஓடி வந்து ஜி.வியை கட்டி அனைத்துக் கொண்டார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.