உலகிலேயே இரண்டாவது வீரர்.. மாபெரும் சாதனை படைத்த பொல்லார்ட்!

துபாயில் 2025 இண்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கும் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று(ஜன.16) நடைபெற்றது. 

சாதனை படைத்த பொல்லார்ட்

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் கீரான் பொல்லார்ட் 23 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். அப்போது 2 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்நிலையில்தான் கீரான் பொல்லார்ட் உலக சாதனையை படைத்தார். 

It’s always raining sixes when Polly’s at the crease! 

Pollard smashed three huge 6s to take the MI Emirates to a total of 159. #ILT20onFanCode pic.twitter.com/StJuB2GOPT

— FanCode (@FanCode) January 16, 2025

 

அதாவது அவர் 3 சிக்சர்கள் அடித்த நிலையில், டி20 போட்டிகளில் 901 சிக்சர்களை எட்டினார். முன்னதாக 900 சிக்சர்களை தொட்ட ஒரே வீரராக கிறிஸ் கெயில் மட்டுமே இருந்தார். 

இந்த நிலையில், அவரை தொடர்ந்து கீரான் பொல்லார்ட் 2வது வீரராக 900 சிக்சர்களை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிங்க: சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவம்; வீட்டுப் பணிபெண் கூறும் திடுக்கிடும் தகவல்கள்

உலக அளவில் இரண்டாவது இடம்

இந்த பட்டியலின் முதல் இடத்தில் அதிரடி மன்னனான கிறிஸ் கெயில் உள்ளார். அவர் 463 இன்னிங்ஸில் 14,562 ரன்கள் எடுத்ததோடு 1056 சிக்சர்கள் விளாசியுள்ளார். 

கீரான் பொல்லார்ட் 690 போட்டிகளில் 13,429 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 836 ஃபோர்கள் மற்றும் 901 சிக்சர்கள் அடங்கும். இதனால் இப்பட்டியலில் இவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அதேபோல், 60 அரை சதங்களும் 1 சதமும் விளாசி உள்ளார் பொல்லார்ட். மேலும், பகுதி நேரப் பந்து வீச்சாளராக செயல்பட்ட அவர் 326 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 

இவர்களை தொடர்ந்து ஆன்ட்ரே ரசல் 529 போட்டிகளில் 727 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும் நிகோலஸ் பூரான் 376 போட்டிகளில் விளையாடி 593 சிக்சர்களுடன் நான்காவது இடத்திலும் நியூசிலாந்தைச் சேர்ந்த காலின் முன்ரோ 434 போட்டிகளில் விளையாடி 550 சிக்சர்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர். 

டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாக வீரர்களின் பட்டியலில் முதல் நான்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: 23 கி.மீ-க்கும் மேல் மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங்.. டாடா அல்ட்ராஸின் சிறப்பம்சங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.