What to watch on Theatre & OTT: மதகஜராஜா, Rifle Club, நேசிப்பாயா – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

மதகஜராஜா (தமிழ்)

மதகஜராஜா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி… என பல ஸ்டார் காஸ்ட்டுடன் உருவான ‘மதகஜராஜா’. காமெடி, கலாட்ட நிறைந்த இத்திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காதலிக்க நேரமில்லை (தமிழ்)

காதலிக்க நேரமில்லை

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்தியா மேனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. காதலிக்க, திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காத (நேரமில்லாத) நித்தியாமேனன், செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்கிறார். அவரது துணிச்சலான அந்த முடிவு அவரது வாழ்வில் உண்டாக்கிய மாற்றங்களை, மகிழ்ச்சியை வித்தியாசமான காதல் கதையுடன் சொல்கிறது இத்திரைப்படம்.

நேசிப்பாயா (தமிழ்)

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. காதல் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Pravinkoodu Shappu (மலையாளம்)

ஶ்ரீராஜ் ஶ்ரீநினிவாசன் இயக்கத்தில் சௌபின் சாஹிர், பாசில் ஜோசப், செம்பன் வினோத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Pravinkoodu Shappu’. திரில்லர் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Sankranthiki Vasthunam (தெலுங்கு)

அனில் ரவிபுடி இயக்கத்தில் துக்காபாடி வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sankranthiki Vasthunam’. ஆக்‌ஷன், ரொமாண்டிக் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Daaku Maharaaj (தெலுங்கு)

பாபி இயக்கத்தில் நந்தமுரி பாலக்கிருஷ்ணா, ஊர்வசி ரெளடுளா, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Daaku Maharaaj’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Azaad (இந்தி)

அபிஷேக் கபூர் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஆமன் தேவ்கன், மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Azaad’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Emergency (இந்தி)

எமெர்ஜென்சி – கங்கனா ரனாவத் – Emergency

கங்கனா ரணாவத் இயக்கி நடித்திருக்கும் திரைப்பட்ம ‘Emergency’. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Wolf Man (ஆங்கிலம்)

லே வான்னெல் இயக்கத்தில் கிறிஸ்டோபர் அப்போட், ஜூலியா கார்னர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wolf Man’. ஹாரர் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

A Real Pain (ஆங்கிலம்)

ஜெஸ்ஸி ஈசென்பெர்க் இயக்கத்தில் கல்கின், ஜெனிபர் க்ரே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘A Real Pain’. இதமான, வாழ்க்கைக் கருத்தை ஜாலியாகச் சொல்லும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Mokshapatnam (தெலுங்கு) – Aha

Back in Actionn (ஆங்கிலம்) – Netflix

இந்த வார வெப்சீரிஸ்கள்

Paatal Lok Season 2 (இந்தி) – Amazon Prime Video

The roshans (இந்தி) – Netflix

தியேட்டர் டு ஓடிடி

Soodhu Kavvum 2 (தமிழ்) Amazon Prime Video

Once Upon A Time In Madras (Tamil) – Aha

Kadam Kadha (மலையாளம்) – Amazon Prime Video

Rifle Club

Family Padam (தமிழ்) – Aha

Rifle Club (மலையாளம்) Netflix

Pani (மலையாளம்) Sony LIV

Ramnagar Bunny (தெலுங்கு) – Aha

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.