மத்திய ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
டெப்புட்டி இயக்குநர், அசிஸ்டென்ட் இயக்குநர், ஸ்டாட்டிஸ்டிக்கல் ஆபீசர், ஃபீல்ட் ஆபீசர் உள்ளிட்ட பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 49
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 35. (சில பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஒவ்வொரு பணிகளுக்கேற்ப ரூ.25,500-ல் இருந்து ரூ.2,08,700 வரை மாறுபடும்.
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிகளுக்கேற்ப இளங்கலை முதல் முதுகலை வரை கல்வித்தகுதிகள் மாறுபடும்.
பெரும்பாலும் ஜவுளித்துறை, கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் படித்திருக்க வேண்டும்.
குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கேற்ப அனுபவங்கள் தேவைப்படுகிறது.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
தேர்வு மற்றும் நேர்காணல்
தேர்வு மையங்கள்:
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர், திருப்பூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
மேலும், தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.