ஸ்ரீஹரிகோட்டா: உலக நாடுகளுக்கு இணையாக, இஸ்ரோவின் சாதனையான, SpaDeX டாக்கிங்கின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், SDX-01 இலிருந்து வரும் போர்டு காட்சிகளில் SDX-02 ஒன்றையொன்று நெருங்குவதையும், டாக்கிங் வெற்றியடைந்த தருணத்தில் மிஷன் கன்ட்ரோலின் எதிர்வினையையும் நீங்கள் காண முடியும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, முதன்முறையாக விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் செயற்கைகோள்களை […]