புதுடெல்லி: பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
வரலாற்று அநீதிகளுக்கு சட்ட தீர்வு கோருவது இந்துக்களின் அடிப்படையான அரசியல்சாசன உரிமை. அதை மறுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது காங்கிரஸ். மதச்சார்பின்மை பாதுகாப்பு என்ற பெயரில் வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது இந்துக்களுக்கு எதிரான வெளிப்படையான போர் அறிவிப்பு. காங்கிரஸ் கட்சி தற்போது புதிய முஸ்லிம் லீக்-ஆக மாறியுள்ளது.
மத அடிப்படையிலான இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவத்தது. அதைத் தொடர்ந்து வக்பு சட்டத்தை அறிமுகம் செய்து, முஸ்லிம்கள் சொத்துக்களுக்கு உரிமை கோரவும், நாடு முழுவதும் சிறிய பாகிஸ்தான்களை உருவாக்கவும் வழி வகுத்தது. வரலாற்று மற்றும் மதவழிபாட்டு தலங்களுக்கு இந்துக்கள் உரிமை கோருவதை தடுக்க வழிபாட்டு தலங்கள் சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. இவ்வாறு அமித் மால்வியா கூறியுள்ளார்.