திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

சென்னை: நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுக.,வில் இணைந்தார்.

அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது மகள் திவ்யா இன்று திமுகவில் இணைந்துள்ளார். சமீப காலமாகவே திவ்யா தனது சமூகவலைதளப் பக்கங்களில் அரசியல் பதிவுகளைப் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.