BB Tamil 8: "நிஜமாகவே இவ்வளவு அன்பும் எனக்கா?" – டைட்டில் வென்ற பிறகு முத்து வெளியிட்ட முதல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 8 முடிவடைந்திருக்கிறது.

பிக் பாஸ் 8-வது சீசனின் இறுதி எபிசோட் நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். செளந்தர்யா ரன்னர் அப்பாக பிக் பாஸ் பயணத்தை முடித்திருக்கிறார்.

தொகுப்பாளராகத் தன்னுடைய மீடியா பயணத்தைத் தொடங்கிய முத்துக்குமரன் தன்னுடைய தனித்துவத்தால் அடுத்தடுத்து பெரிய மேடைகளை ஏறினார். தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 8-ன் மேடையையும் தன்வசப்படுத்தி கோப்பையை வென்றிருக்கிறார். கோப்பை வென்றது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்றையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர், “எல்லோரும் சேர்ந்து இந்த கோப்பையை எனக்குக் கொடுத்திருக்கீங்க. ரொம்பவே கனமாக இருக்கு. அவ்வளவு அன்பு கிடைச்சிருக்கு. வீட்டுக்குள்ள நண்பர்கள் உங்களுக்கு வெளில அவ்வளவு அன்பு இருக்குனு சொன்னாங்க. அப்போ அந்த விஷயம் பெரியதாக தெரில. ஆனால், வெளில வந்து பார்க்கும்போது ரொம்ப வியப்பாக இருக்கு. `நிஜமாகவே இவ்வளவு அன்பும் எனக்கா? என்னுடைய உழைப்புக்கு இவ்ளோ அன்பு கிடைக்குமா’னு வியப்பாக இருக்கு.

MuthuKumaran
MuthuKumaran

என்னால பேசவே முடியல. உங்களுக்கு நன்றியை எப்படி சொல்றதுனு தெரில. அதுனால நன்றியை நன்றியாகவே சொல்லிடலாம்னு முடிவு பண்ணினேன். மக்கள் என் உழைப்பின் மீது அன்பு வைத்து அங்கீகாரமாக கொடுத்த இந்தக் கோப்பையை என் நேர்மையாலும், என்னுடைய உண்மையாலும், நான் நானாக இருப்பதுனாலயும் காப்பாற்றுவேன். இது என் உழைப்பின் மீது சத்தியம். நெஞ்சம் நிறைந்த நன்றி” எனக் பேசியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.