சரவாக்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – நைஜீரியா அணிகள் மோதின. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் இந்த ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா 13 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 65 ரன்கள் எடுத்தது. நைஜீரியா தரப்பில் அதிகபட்சமாக லில்லியன் உதே 19 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 66 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த நைஜீரியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அனிகா டாட் 19 ரன்கள் எடுத்தார். நைஜீரியா தரப்பில் யூசன் அமைதி, அடேஷோலா அடேகுன்லே, அதிர்ஷ்ட பக்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.