ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை […]