அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் அதிபராக நுழைந்தார்.
அதிபராகப் பொறுப்பேற்றபின் ட்ரம்ப் தனது முதல் உரையில், “அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.” என்று கூறினார். இந்த நிலையில், அதிபராகப் பொறுப்பேற்ற அடுத்த 8 மணிநேரத்தில், உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.
மேலும், “கோவிட் 19 தொற்றுநோயை உலக சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டது. உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது. அதோடு, அமெரிக்காவிடமிருந்து அதிக நிதியைக் கோரியது.” என்று விலகலுக்கான காரணங்களை ட்ரம்ப் பட்டியலிட்டார்.
ட்ரம்ப் இவ்வாறு செய்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, அதிபராகப் பதவி வகித்தபோது 2020-ல், கொரோனா பெருந்தொற்றில் உலக சுகாதார அமைப்பின் அணுகுமுறையை விமர்சித்து, அமெரிக்காவின் நிதியை நிறுத்துவதாக அச்சுறுத்தினார். அதன்படி, 2020 ஜூலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கையை எடுத்தார்.
இருப்பினும், அந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோற்றதால் அது நடைமுறையாகவில்லை. இத்தகைய சூழலில்தான், தான் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதும் மீண்டும் அதே உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திருக்கிறார். இதேபோல், தன்னுடைய முதல் ஆட்சிக்காலத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த ட்ரம்ப், பைடன் ஆட்சியில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததால், தற்போது அதிபரானதும் அதே உத்தரவில் மீண்டும் கையெழுத்திட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…