சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு: பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்!

Aakash Chopra Criticises BCCI: சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இந்திய அணி இத்தொடருக்கான இந்திய அணியை கடந்த 18ஆம் தேதி அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையில் ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்  என்ற 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. 

இதில் ஆல்-ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், ரவீந்தர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். 

மேலும் படிங்க: VIDEO: டான்ஸ் ஆடிய டிரம்ப்! பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் செய்கையால் சர்ச்சை!

இந்திய அணி தேர்வை விளாசிய ஆகாஷ் சோப்ரா 

இது குறித்து ஆகாஷ் சோப்ரா அவரது யூடியூப் சேனலில் பேசுகையில், இந்த நடவடிக்கை இந்திய அணிக்கு பெரிதாக உதவும் என சொல்ல முடியாது. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி விளையாட வைக்கப்பட்டனர். ஆனால் அது பெரிதாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

இந்திய அணியில் விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர்களை எடுக்க வேண்டும். பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ஆனால் அதற்குப் பதிலாக ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்திருக்கலாம். உங்களுக்குச் சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் வருண் சக்கரவர்த்தியை எடுத்திருக்கலாம். 

பேட்டர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

இது போன்ற அணி தேர்வு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு உதவவில்லை. இந்திய அணியின் பேட்டிங் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விக்கெட்களை வீழ்த்தும் பந்து வீச்சாளர்களை மட்டுமே அணியில் சேர்க்க வேண்டும்.  

இந்திய அணியின் தேர்வு பேட்ஸ்மேன்கள் மீது போதிய நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி துபாயில் விளையாடுகிறது. துபாய் மைதானமோ வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. 

10 நாட்கள் தொடர்ச்சியாக விளையாடினாலும் ஆடுகளத்தில் எவ்வித பிளவும் ஏற்படாது. எனவே இந்திய அணியில் 4 சுழற் பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்காப்புகளை சிந்தித்து செயல்படுவதை விட விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: இந்தியாவின் முதல் சோலார் எலக்ட்ரிக் கார் அறிமுகம்.. 250 கிலோமீட்டர் வரை செல்லுமாம்.. சிறப்பு அம்சங்கள் இதோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.