Saif Ali Khan: டிஸ்சார்ஜ் ஆன சைஃப் அலிகான்; வீட்டில் குவிந்த ரசிகர்கள்; மருத்துவர்கள் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் திருட வந்த நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டார். சைஃப் அலிகான் அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது தாக்கப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடப் பகுதி உட்பட 6 இடங்களில் பிளேடால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதற்காக மருத்துவர்கள் அவருக்கு 5 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்தனர். கழுத்து மற்றும் தோள் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

சைஃப் அலிகான்
சைஃப் அலிகான்

இந்நிலையில் 6 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலிகான் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரைக் காண மருத்துவமனை மற்றும் அவரது வீட்டில் ரசிகர்கள் அதிக அளவில் கூடி இருந்தனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. டிஸ்சார்ஜிற்கு பின் ஒரு வாரத்திற்கு முழுமையாக ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் சைஃப் அலிகானிடம் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக சைஃப் அலிகானைத் தாக்கியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த பஹிர் என்பவரை போலீஸார் 70 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். அவரை காவல்துறையினர் இன்று சைஃப் அலிகான் வீட்டிற்கு அழைத்துச்சென்று, எப்படி வீட்டிற்குள் நுழைந்தான் என்பது குறித்து நடித்துக்காட்ட வைத்து, பதிவு செய்துகொண்டனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.