ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் தோல்வி கண்ட போபண்ணா ஜோடி

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் – ஒலிவியா காடெக்கி ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-6, 6-4, 11-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற ஜான் பியர்ஸ் – ஒலிவியா காடெக்கி ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.