காரைக்குடி : `தாயாரைப் பற்றிய நினைவு..!’ – முதலமைச்சர் முன் நா தழுதழுத்த ப.சிதம்பரம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தன் தாயார் பெயரில் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட நூலக விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நா தழுதழுக்க பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது.

நூலகம் திறந்த பின்பு பல்கலைக்கழக அரங்கத்தில் நடந்த விழாவில் ப.சிதம்பரம் பேசும்போது, ” என் தாயாருக்கு ஆங்கிலமும் தமிழும் நன்கு தெரியும். என்னை சிறு வயதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை படிக்கத் தூண்டியவர் அவர்தான். அவருக்கு நன்றி கலந்த அஞ்சலி” என்றார். (அப்போது கண்கள் கலங்க, நா தழுதழுக்க அவர் பேச, அரங்கமே அமைதியானது)

விழாவில்

தொடர்ந்து பேசும்போது, ‘தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும். வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டுமென்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும்.

ப.சிதம்பரம்

தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழ் இலக்கியம், இயல், இசை, நாடகத்தை தாண்டி கணிதம், கணினி அறிவியல், சட்டம், மருத்துவம், வேளாண்மை, மேலாண்மை, டிஜிட்டல், ரோபாடிக்ஸ் தமிழ் என பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.

இது தனி நூலகம் மட்டுமல்ல, புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கம். சிவகங்கை பூமி, தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமின்றி தமிழ்ப்புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்த அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.

விழாவில்

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தினருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தின் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் அதிகப்படுத்தலாம்.

எங்களுக்கு யானைப் பசி., முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானைப் பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தர வேண்டும்” என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “மேகம் அழுவது உண்டு, அதற்கு பெயர் மழை. இரவு கூட அழுவது உண்டு, அதற்குப் பெயர் பனி., சூரியன் அழுது பார்த்ததுண்டா? அதை இன்று ப.சிதம்பரம் கண்கலங்கியபோது பார்த்தேன்.” என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.