பாரபங்கி உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா மற்றும் இந்து தெய்வங்களை குறித்து அவதூறாக பேசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றான மகா கும்பமேளா அடுத்தமாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் இந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், ஆன்மிக பெரியோர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். இந்நிலையில் பாரபங்கி கோட்வாலி காவல் நிலைய அதிகாரி அலோக் மணி திரிபாதி, […]