IND vs ENG 1st T20 Latest News Updates: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் பலரும் எதிர்பார்த்த ஷமி இன்று விளையாடவில்லை. அர்ஷ்தீப் மட்டுமே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கினார். மூன்று ஸ்பின்னர்களுடன் இந்தியா வந்தது. மறுபுறம், அடில் ரஷீத் மட்டுமே இங்கிலாந்துக்கு பிரீமியம் ஸ்பின்னர், லியம் லிவிங்ஸ்டன் பார்ட் டைம் ஸ்பின்னராக இருந்தார். மற்ற அனைவருமே வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அர்ஷ்தீப் சிங்கின் வேகத்திலும், வருண் சக்ரவர்த்தியின் சுழலிலும் டாப் ஆர்டர் காலியானது. பவர்பிளேவில் ஹர்திக் பாண்டியா அதிக ரன்களை கொடுத்த நிலையில், பவர்பிளேவுக்கு பின் தனது இரண்டாவது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரை ஒரே ஓவரில் வருண் சக்ரவர்த்தி ஆட்டமிழக்கச் செய்தது பெரும் திருப்பத்தை உண்டாக்கியது.