IND vs ENG: தோற்றது இங்கிலாந்து தான்! ஆனால் கவலையில் ஆர்சிபி ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி எளிதானது. இருப்பினும் இந்த வெற்றியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். காரணம் இந்த இங்கிலாந்து அணியில் 3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்திய மண்ணில் இவர்கள் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். அதில் 2 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதனால் இந்த ஆண்டும் கோப்பை இல்லையா என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

பில் சால்ட்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பில் சால்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ. 11.50 கோடி ஒப்பந்தம் செய்தனர். பில் சால்ட் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் ஓப்பனராக உள்ளதால் அதிக விலைக்கு ஏலம் போகி இருந்தார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தார். இருப்பினும், முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்தில் சால்ட் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

லியாம் லிவிங்ஸ்டோன்

ஆல்ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டோன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். எந்த ஒரு நிலையிலும் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய திறன் கொண்டவர் லியாம் லிவிங்ஸ்டோன். ஆனால் முதல் டி20யில் ஒரு ரன் கூட எடுக்காமல் வருண் சக்ரவர்த்தியின் பந்தில் அவுட் ஆனார்.

ஜேக் பெத்தேல்

21 வயதான ஜேக் பெத்தேல் டி20 தொடர்களில் தொடர்ந்து உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ரூ. 2.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் முக்கியமான கட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்தில் பெத்தேல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் செயல்பாடு

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது இந்தியா. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா இங்கிலாந்து அணியை 132 ரன்களில் சுருங்கியது. இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி முக்கியமான 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் அர்ஸ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். எளிய இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.