இந்த ஆண்டு தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் இவை இடம்பெறலாம் என்றிருக்கும் 7 எதிர்பார்ப்புகள்…
வருமான வரி விலக்கு வரம்பு நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இன்னமும் அதிகரிக்கப்படலாம்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படலாம். அது மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.
தற்போது பணவீக்கம் 5-ல் இருந்து 7 வரை மாறி மாறி இருந்து வருவதால், இதைக் குறைக்க பட்ஜெட்டில் எதாவது அம்சம் இடம்பெறலாம்.
மக்களின் நுகர்வு குறைந்து வருவதாக பல தரவுகள் கூறுகின்றன. இதை அதிகரிக்க எதாவது திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய நிதி மற்றும் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டமானது விரிவுப்படுத்தப்படலாம்.
கல்வி, சமூக பாதுகாப்பு, மருத்துவம் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளின் அளவு அதிகரிக்கப்படலாம்.