சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பேரதிர்வை ஏற்படுத்தியது. அதுபோல மேலும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக தமிழ்நாடு அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலமைச்சர் […]