உலகப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், தனது பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்வை பில் கேட்ஸ் நினைவு கூர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசும் பில் கேட்ஸ், “நான் நான்காவது படிக்கும்போது என்னுடைய ஆசிரியர், எதாவது வித்தியாசமாகக் கொண்டு வந்து அதைப் பற்றி பேசுமாறு என்னிடம் கூறினார். நான், இதை என் தந்தையிடம் கூறியபோது, இறைச்சிக் கூடத்துக்குச் சென்று மாட்டின் நுரையீரலை வாங்கலாம் என்று அவர் கூறினார்.
உண்மையில் அது எனக்கு சிறந்த ஐடியாவாகத் தோன்றியது. பின்னர் அதை வெள்ளைத் தாளில் சுருட்டி கொண்டுச் சென்றேன். வகுப்பறையில் அதை அவிழ்த்தபோது, பிரமிப்பாகவும் அதேசமயம் ஒரு மாதிரியாகவும் இருந்தது. அப்போது, கையுறை கூட பயன்படுத்தவில்லை.
பின்னர், ஆசிரியர் கார்ல்சன் `இது சிறப்பாக இருக்கிறது. ஆனால், இதை இங்கிருந்து கொண்டு செல்’ என்று கூறினார். அது பெரிய வெற்றியாக இருந்தது” என்று கூறினார்.
அந்த வீடியோவில், மாட்டின் நுரையீரலைக் காண்பித்துக்கொண்டே, `மாட்டின் நுரையீரலில் எதுவும் மாறவில்லை’ என பில் கேட்ஸ் தனது நினைவைப் பகிர்ந்துகொண்டிருந்தார். மேலும், தன்னுடைய `SOURCE CODE’ எனும் புத்தகத்தில் இந்த நினைவைப் பகிர்ந்திருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பதிவில் பில் கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…