பிரயாக்ராஜ் நகரில் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மகாகும்பமேளா புகைப்படங்கள் இஸ்ரோ வெளியிட்டது

விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா நடைபெறும் இடத்தின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பல கோடி பக்தர்கள் புனித நீராடவுள்ளனர். இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உத்தரபிரதேச அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது? என்பது தொடர்பான புகைப்படங்களை இஸ்ரோ விண்ணிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் வெவ்வேறு செயற்கைக்கோள்கள் மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6- ம் தேதி, டிசம்பர் 22-ம் தேதி, 2025-ம் ஆண்டு ஜனவரி 10 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக இணைத்து இஸ்ரோவால் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணிலிருந்து எடுக்கப்பட்டாலும், திரிவேணி சங்கமத்தில் ஏராளமான மக்கள் கூடியிருப்பது போன்ற புகைப்படங்கள், ஏராளமான கூடாரங்களை அமைத்திருக்கும் படம், வாகன வசதி நிறுத்த புகைப்படம் ஆகியவை தெளிவாக அமைந்துள்ளன. பழைய தேதிகளில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்த கூடாரங்கள், ஏராளமான மக்கள் கூட்டம் இல்லை.

இதுகுறித்து இஸ்ரோவின் கீழ் செயல்படும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (என்ஆர்எஸ்சி) இயக்குநர் டாக்டர் பிரகாஷ் சவுகான் கூறும்போது, “இந்த புகைப்படங்களை இஸ்ரோவின் ரேடார்சாட் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டன. வெவ்வேறு நாட்களில் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இஸ்ரோவால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவைதான் தற்போது வெளியாகியுள்ளன” என்றார்.

மத்திய அறிவியல்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “தற்போது நம்மிடையே உள்ள இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் மக்கள் கூடும்போது அவர்களை நிர்வகிப்பதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கின்றன. அனைவருக்கும் தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க தொழில்நுட்பமும் பாரம்பரியமும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதற்கு மகா கும்பமேளா ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக நிற்கிறது” என்றார்.

வழக்கமாக நமது நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். மகா கும்பமேளா என்பது மொத்தம் 4 இடங்களில் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன், மகாராஷ்டிர மாநிலம் நாசிக், உத்தர பிரதேசத்தில் பிரக்யாராஜ் ஆகிய 4 புண்ணிய நகரங்களில் இடங்களில் மகா கும்பமேளா நடத்தப்படும். அந்த வகையில் இந்த சுழற்சி முறையில் தற்போது மகா கும்பமேளா பிரக்யாராஜில் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மகா கும்பமேளாவுக்காக உருவாக்கப்பட்ட புதிய சிவாலயா பூங்காவும், விண்ணிலிருந்து இஸ்ரோவால் புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.