துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அதன்படி கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
2024-ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), பில் சால்ட் (இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ் ) , சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா) , ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) , அர்ஷ்தீப் சிங் (இந்தியா).