மருதமலை : ஆசியாவிலேயே பிரமாண்ட முருகன் சிலை – 160 அடி உயரத்தில் உருவாகும் கோவையின் புதிய அடையாளம்!

கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

சேகர் பாபு

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2,400 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளன. பழநி உள்ளிட்ட 90 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. மருதமலை கோயிலில் முதல்கட்டமாக ரூ.6.5 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளன.

இரண்டாவது கட்டமாக ரூ.11 கோடி செலவில் அன்னதான கூடம், முடி காணிக்கை கூடம் உள்ளிட்டவை அமைக்கவுள்ளோம். மூன்றாவது கட்டமாக ரூ.23 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளபட உள்ளன.

மருதமலை முருகன் கோயில்

இதேபோல பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்சி வயலூர் முருகன் கோயில், ஊட்டி காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட 7 கோயில்களில் ரூ.872 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற உள்ளன.

மருதமலையில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மே மாதத்துக்குள் லிப்ட் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மருதமலை கோயிலில்160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருதமலை

இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம் தமிழ் கடவுள் முருகருக்கு ஆசியாவிலேயே உயரமான சிலை மருதமலையில் அமைக்கப்பட உள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்யப்படும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.