IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!

Indian vs England 3rd T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று செவ்வாய்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம். எனவே அணியில் சில மாற்றங்களை செய்ய உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரிங்கு சிங் காயம்

2வது டி20 போட்டியில் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக வெளியேறினர். இதனால் ரின்கு சிங்கிற்கு பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் முக்கியமான கட்டத்தில் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. இதனால் அவர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் இரண்டு 2 போட்டிகளில் இடம் பெறாத முகமது ஷமி இந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. 2 ஆண்டுகளாக ஓய்வில் இருந்த ஷமி முழு உடற்தகுதிக்கு திரும்பிய போதிலும் பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் ஷமி இடம் பெறலாம்

கேப்டன் சூர்யகுமார் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் 3வது டி20 போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமியை பிளேயிங் 11ல் இடம் பெற செய்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே போல ஜுரலுக்குப் பதிலாக ஷிவம் துபே அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. நிதிஷ் ரெட்டி வெளியேறி உள்ளதால் சிவம் துபே மீதமுள்ள டி20 போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு மாற்றங்களை தவிர வேறு மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தங்களது அதிரடியை தொடர உள்ளனர். 2வது டி20 போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த திலக் வர்மா 3-வது இடத்தில் களமிறங்க உள்ளார். கேப்டன் சூர்யகுமார் 4வது இடத்தில் களமிறங்குவார்.

கடந்த சில தொடர்களாக சூர்யாகுமார் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இந்த போட்டியில் மீண்டும் பார்மிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 5வது இடத்திலும், சிவம் துபே 6வது இடத்திலும் பேட்டிங் செய்ய உள்ளனர். அவர்களை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர், துணை கேப்டன் அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் களமிறங்குவர். முகமது ஷமி அணிக்குள் வர வேண்டும் என்பதால் ரவி பிஷ்னோய் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. கடைசியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி களமிறங்குவர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான உத்ததேச அணி:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.