சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பியும் இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தாசில்தார் தலைமையில் இந்து சமய […]