சென்னை இன்று நடந்த திமுக எம் பிக்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி அர்சியல் மயமாவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: – ஆளுநருக்கு எதிராக தீர்மானம்:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஓர் அங்கம். ஆனால் அந்த அவையின் மரபை மதிக்கமாட்டார். சட்டமன்றம் நிறைவேற்றி […]
