“சந்தானம் அதைச் சொன்னப்போ அழுதுட்டேன்"- நெகிழும் `லொள்ளு சபா' சாமிநாதன்

நடிகர் லொள்ளு சபா சாமிநாதன் மகள் ஐஸ்வர்யா திருமணம் கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. நடிகர்கள் வையாபுரி, காளி வெங்கட் உள்ளிட்ட சிலர் அதில் கலந்து கொண்டனர்.

‘சிம்பிளா முடிச்சிட்டீங்களே, சினிமா நண்பர்கள் எல்லாரும் கோவிச்சுக்க மாட்டாங்களா?’ எனக் கேட்டு சாமிநாதனுக்கு போனைப் போட்டோம்.

”சார் எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமம். நடிக்கறதுக்காக சென்னை வந்து இங்கேயே செட்டில் ஆகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து நாலு நாள் பிரேக் கிடைச்சா குடும்பத்தோட ஊருக்குக் கிளம்பிடுவேன். ஆயிரம் இருந்தாலும் அங்க கிடைக்கிற காத்து, சூழல் இங்க கிடைக்காது.

எனக்கு ஒரு பொண்ணு – ஒரு பையன். பொண்ணு பேரு ஐஸ்வர்யா என்கிற சம்பூரணம். படிச்சு முடிச்சுட்டு ஒரு கம்பெனியில் ஹெச்.ஆர் வேலையில இருக்கா. அவளுக்குப் போதுமான சம்பளம் வாங்குறா. பையன் பி.காம். படிச்சிட்டிருக்கான்.

`லொள்ளு சபா’ சாமிநாதன்

மாப்பிள்ளை கீர்த்தி வாசன் பெங்களூருவுல ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில மேனஜரா இருக்கார். மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான் கல்யாணம் ரொம்ப ஆடம்பரமா இருக்கணும்னெல்லாம் இல்ல சிம்பிளா இருந்தா போதும்னு சொல்லிட்டாங்க.

சொந்த ஊர்ல மகள் மகன் கல்யாணம் நடக்கறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்னு நினைக்கிறேன். அதுவும் போக, நாம என்ன, அர்ஜுன், தம்பி ராமையா மாதிரியா? சாதாரண நடிகர் சார் நான். அதனால் போதும்னு நினைச்சேன்.

சினிமாக்காரங்களைக் கூப்பிட்டா அவங்களை உரிய முறையில உபரசரிச்சு அனுப்பணும். அதுக்கு எனக்கு ஆள் பலம் போதாது.. அதனாலதான் வரவேற்பு, கல்யாணம் ரெண்டையுமே சிம்பிளா முடிக்க வேண்டியதாகிடுச்சு.

சினிமாக்காரங்க யாருக்காச்சும் இதனால கோபம் இருந்தா மகன் கல்யாணத்துல அதைச் சரி செய்ய முடியுதா பார்க்கலாம்” என்றவர், சார் இந்த ஒரு விஷயத்தை நீங்க மறக்காமக் குறிப்பிடணும்.

சந்தானத்துடன்

‘சந்தானத்தால் கல்யாணத்துக்கு கும்பகோணத்துக்கு வர முடியலை. அதனால ரெண்டு நாள் முன்னாடி ஷூட்டிங் முடிச்ச கையோட ராத்திரி பத்து மணிக்கு திடீர்னு என் வீட்டுக்கு வந்து நின்னார். நாங்க யாருமே எதிர்பார்க்கலை. பொண்ணு மாப்பிள்ளைங்களுக்கு வாழ்த்துச் சொல்லி கிஃப்ட் தந்தவர், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட  ‘உங்களை நம்பி அனுப்புறோம், எங்க பொண்ணை  பத்திரமா பார்த்துக்கங்க’னு சொன்னார். அந்த நொடி என்  கண்ணுல இருந்து என்னை அறியாம கண்ணீர் வந்திடுச்சு” என நெகிழ்கிறார் சாமிநாதன்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.