Thandel: `சாய் பல்லவி… நீங்க ரொம்ப ஸ்பெஷல்; உயிர்க் கொடுத்து நடிக்கிறாங்க!' – நடிகர் கார்த்தி

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கிற மற்றுமொரு காதல் திரைப்படம் `தண்டேல்’.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்ட இத்திரைப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி என தமிழ் பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

நடிகர் கார்த்தி பேசுகையில், “ எனக்கு அதிகமான அன்பு தெலுங்குல் கிடைச்சிருக்கு. அதற்கு நன்றி செலுத்துகிற சந்தர்பமாக இந்த மேடையை நான் பயன்படுத்திக்க விரும்புறேன். இந்த நிகழ்வுக்கு வந்ததுக்குப் பிறகுதான் 2018-ல நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை இத்திரைப்படம் அடிப்படையாகக் கொண்டதுனு தெரிஞ்சது.

இங்க மீன் பிடிக்கிறவங்க பாகிஸ்தான்ல மாட்டிக்கிற மாதிரியான கதைனு சொன்னாங்க. அதற்கு இடையில ஒரு அழகான காதல் கதையையும் இயக்குநர் கட்டமைச்சிருக்காரு. நடிகர் கருணாகரன் பார்டர் தாண்டி இந்தப் படத்துல நடிச்சிருக்காரு. அவருக்கும் வாழ்த்துகள்.

Thandel team

`ஆடுகளம்’ நரேன் சார் நெகடிவ் கதாபாத்திரங்களை தாண்டி காமெடி கதாபாத்திரங்களிலும் மிரட்டிடுவாரு. சமீபத்துல நான் டர்கி போயிருந்தேன். அப்போ ஒரு இசையைக் கேட்டதுமே எங்கையோ கேட்டது போலவே இருக்குனு என் மனைவிகிட்ட சொன்னேன்.

அப்புறம் `ஊ சொல்றியா’ பாடலோட இசைதான்னு தெரிஞ்சது. நான்கூட தேவி ஶ்ரீ பிரசாத் டர்கி பாடல்ல இருந்து காப்பி அடிச்சிட்டார்னு நினைச்சேன். அப்புறம்தான் தேவியோட பாடலைதான் அங்க ரீமிக்ஸ் பண்ணி ஒரு கிளப்ல பயன்படுத்தியிருக்காங்கனு தெரிஞ்சது. எப்போதும் ஸ்டுடியோவுலேயே இருந்து பயங்கரமான உழைப்பைக் அவர் கொடுப்பாரு. சாய் பல்லவி…நீங்க ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர்க் கொடுத்து நடிக்கிறாங்க.

Actor Karthi with Naga Chaitanya – Thandel Event

ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியோட தியாகமும், வலியும் எப்படி இருக்கும்னு நமக்கு தெரியாது. அதை அப்படியே சாய் பல்லவி திரையில கொண்டு வந்திருந்தாங்க. நாக சைதன்யாவோட தாத்தால இருந்து எல்லோருமே நமக்கு பரிச்சயம். அதன் பிறகு நாகர்ஜூனா சார்கூட நான் வேலை பார்த்திருக்கேன். அவர்கூட வேலை பார்க்கும்போது நான் மதிய நேரத்துல சைக்கிள் ஓட்டுவேன். நான் சைக்கிள் ஓட்டுற அந்த ரோடுல ஸ்பீட் பிரேக்கர் அதிகமாக இருக்கும். அதுல நான் சைக்கிள் தொடர்ந்து ஓட்டுற விஷயத்தை தெரிஞ்சுகிட்டு எனக்காக அந்த ஸ்பீட் பிரேக்கரையெல்லாம் உடைக்கச் சொல்லியிருக்காரு.” எனப் பேசினார் கார்த்தி.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.