ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' – காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கு விசாரணை குறித்து காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்திருக்கிறார். “கடந்த 25 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் காண்பிக்கப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கிறோம். புலன் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என்று தெரிய வந்திருக்கிறது. 

ஈ.சி.ஆர் வைரல் காணொலி காட்சிகள்

அந்த 7 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் 3 பேர் கைது செய்யப்பட வேண்டி இருக்கிறது. அவர்களிடம் இருந்த 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் தொடர்பான வீடியோவை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதை விவரிக்க வேறு எதுவும் இல்லை.  இதைப் பற்றி மேலும் பேசினால் புலன் விசாரணை பாதிக்கும்.

வாகனத்தில் கொடியை பார்த்திருப்பீர்கள். கட்சிக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இந்த 7 குற்றவாளிகளில் 5 பேர் ஒரு  குறிப்பிட்ட கல்லூரியில் படிக்கிறார்கள். ஒருவர் வெளிமாநில கல்லூரியில் படிக்கிறார். மற்றவர்கள் படித்து முடித்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன்

அதில்  சந்துரு என்ற நபரின் பெயரை செய்திகளில் வெளியிட்டிருந்தீர்கள். அவர் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் இருக்கிறது. 25 ஆம் தேதி சம்பவம் நடந்திருக்கிறது. 26 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்கள். அதன் அடிப்படையில் நான்கு தனிப்படைகள் விசாரித்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.