நக்கலைட்ஸ் யூட்யூப் சானலின் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குடும்பஸ்தன்’.
கல்யாண வாழ்க்கையில் நுழையும் மணிகண்டன், குடும்பத்தை நடத்த என்னமாதிரியான பிரச்னைகளை, சவால்களை எல்லாம் சந்திக்கிறார் என்பதை ஜாலியாகச் சொல்லும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நேற்று (ஜன 31) நடைபெற்றது. அதில், இப்படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான பிரசன்னா பாலசந்திரன், தனது சினிமா பயணம் குறித்தும் யூடியூப் குறித்தும் பேசியிருக்கிறார்.
“‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனல்தான் எங்களுக்கு வாழ்க்கைக் கொடுத்தது. எங்களுக்கு ஆதரவு தந்த தமிழ்நாட்டு மக்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எங்களோட முதல் வீடியோவோட பட்ஜெட் ரூ.250. வாகனத்துக்கான பெட்ரோல் செலவு, டீ செலவுக்குமே அது சரியா போயிடும். ஒரு ஆண்டு அப்படித்தான் போச்சு. யாருக்கும் சம்பளமே கிடையாது. அப்போ எங்ககூட இருந்து உழைச்ச எல்லாருக்குமே இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்.
சினிமாக்குள்ள வர நிறையக் கஷ்டப்பட்டோம். சினிமா பத்தி நிறையக் கட்டுக்கதைகள் சொல்லி வைச்சிருக்காங்க. அதுல முக்கியமானது சினிமா வேற, யூடியூப் வேற அப்டினு சொல்றது. யூடியூப்ல தான் சினிமாக்கான பயிற்சியே எடுத்தோம். அதனால யூடியூப் வேற, சினிமா வேறனு வேறுபடுத்தி பேசாதீங்க. சினிமால இருக்க சுதந்திரம்கூட, யூடியூப்ல இருக்காது. யூடியூப்ல 10 நிமிஷத்துல கதையச் சொல்லி, பார்வையாளர்கள என்கேஜ் பண்ணி வைக்கணும். சினிமாலகூட 200 ரூபா கொடுத்து படம் நல்லா இல்லைனாலும் பல்ல கடிச்சுட்டு உட்கார்ந்து பார்ப்பாங்க. ஆனால், யூடியூப்ல வீடியோ நல்ல இல்லைனா, அடுத்த வீடியோ பார்க்க போயிடுவாங்க.
யூடியூப்பில் சினிமா கனவுடன் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு கடுமையாக உழைப்பவர்கள் நிறையபேர் இருக்காங்க. அந்த யூடியூப்பை, யூடியூப்பர்களைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…