டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 7 பேர் , தேர்தலுக்கு 5 நாள் முன்பாக ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
டெல்லியில் வரும் 5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத எம்எல்ஏ.க்களில் 7 பேர் நேற்று தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்கள் நரேஷ் யாதவ், ரோகித் குமார், ராஜேஷ் ரிஷி, மதன் லால், பவன் சர்மா, பாவ்னா கவுட், பி.எஸ்.ஜுன் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். கேஜ்ரிவால் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சி தனது நேர்மை கொள்கையில் இருந்து விலகி ஊழலில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.