குவெட்டா: பாகிஸ்தானில் டிக் டாக்கில்வீடியோ வெளியிட்டு வந்த 15 வயது மகளை அவரது தந்தையே கொலை செய்தார்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரை சேர்ந்தவர் அன்வருல் ஹக். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறினார். இருவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஹிரா என்ற 15 வயது மகளை மட்டும் அழைத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு அன்வருல் வந்தார். மனைவி மற்ற 2 மகள்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர்.
அமெரிக்காவில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது. அதனால், பாகிஸ்தான் வந்த ஹிரா டிக்டாக் செயலி மூலம் பல வீடியோக்களை வெளியிட்டார். அதை அவரது தந்தை அன்வருல் கடுமையாக கண்டித்தார். டிக் டாக் வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று எச்சரித்தார். எனினும், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டார் ஹிரா.
இதையடுத்து அன்வருல் மற்றும் ஹிராவின் தாய் மாமா தய்யப் அலி ஆகியோர் சேர்ந்து ஹிராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதை யடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆணவக் கொலை போல் இருவரும் சேர்ந்து 15 வயது பெண்ணை சுட்டுக் கொன்றுள்ளனர். இருவரும் திட்டமிட்டே இந்த கொலையை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு மிக கொடூரமான குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது’’ என்றனர்.
சீனாவின் டிக் டாக் செய லிக்கு அனுமதி வழங்க அந்நிறுவனத்தின் பங்கில் 50 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்று புதிதாக பதவியேற்றுள்ள அதிபர்டொனால்டு ட்ரம்ப் நிபந் தனை விதித்துள்ளார்.