இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற செய்த பெரிய மோசடி? இங்கிலாந்து அணி அதிருப்தி

India vs England T20 controversy | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-1 என கைப்பற்றியது. இன்னும் ஒரு டி20 போட்டி எஞ்சியிருக்கிறது. இருப்பினும் புனேவில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இங்கிலாந்து அணி அதிருப்திய தெரிவித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெறுவதற்காக மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும், அந்நாட்டு ரசிகர்களும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு ஐசிசி உடைந்தையாக செயல்பட்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து மோதல்

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான 4வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் இந்தியாவும், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் கண்டன. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் இந்திய அணியிடம் இந்த டி20 தொடரையும் இழந்திருக்கிறது. கடைசி மற்றும் 5வது போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி நடக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் இந்தியா 3 போட்டிக்களிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

இந்திய அணியின் மோசடி என்ன?

இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியபோது அரைசதம் அடித்த ஷிவம் துபே, பந்துவீச்சின்போது பீல்டிங் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். இந்த முடிவில் தான் சர்ச்சையே ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஐசிசி விதிப்படி, ஒரு பிளேயருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அல்லது விளையாட முடியாமல் போனால் அவருடைய திறமைக்கு நிகரான ஒரு பிளேயரை மட்டுமே களமிறக்க வேண்டும். பேட்ஸ்மேன் என்றால் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் என்றால் ஆல்ரவுண்டர், வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்றால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், சுழற்பந்துவீச்சாளர் என்றால் சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் வேறு பிளேயரை களமிறக்கி கொள்ளலாம். அப்படி பார்க்கையில் துபே ஒரு அதிரடி பேட்ஸ்மேன், மீடியம் வேகப்பந்து வீசக்கூடியவர். அவருக்கு பதிலாக களமிறங்கிய ஹர்ஷித் ராணா அக்மார்க் வேகப்பந்துவீச்சாளர். இப்படி ஒரு பிளேயரை இறக்கி இருக்கக்கூடாது. 

இங்கிலாந்து அணி கடும் அதிருப்தி

ஹர்ஷித் ராணா களமிறங்கியது மட்டுமில்லாமல் அற்புதமாக பந்துவீசி 3 இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். ஹர்ஷித் ராணா பீல்டிங் இருப்பது குறித்து போட்டியின்போது கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் போட்டி நடுவர் அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என கூறினார். 

இங்கிலாந்து வீரர்கள் விமர்சனம்

இந்திய அணியின் இந்த செயலை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மிகப்பெரிய மோசடி என காட்டமாக விமர்சித்துள்ளனர். இதற்கு ஐசிசியும் உடந்தையாக செயல்பட்டிருப்பதாகவும் அவர்கள் விமர்சித்திருக்கின்றனர். இந்திய அணிக்கு மட்டும் இம்பாக்ட் பிளேயர் விதியை ஐசிசி பிரத்யேகமாக கொடுத்துவிட்டதா? என்றும் அலையஸ்டர் குக், கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய அணி, மோசடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியிருப்பதாகவும் மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் விமர்சித்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.