வாஷிங்டன்: அமெரிக்காவில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் கூறியதாவது: அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது.
இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்
ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.