"டெல்லி டீமில் இருக்க ரூ.1 லட்சம் கேட்டார்கள்".. விராட் கோலி பகிர்ந்த பகீர் செய்தி!

Virat Kohli: 2012ஆம் ஆண்டு பிறகு தற்போதுதான் விராட் கோலி மீண்டும் ரஞ்சி டிராபிக்கு திரும்பி உள்ளார். டெல்லி அணிக்காக களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதனால் டெல்லி மைதானமே நிரம்பி வழிந்தது. 

ஆனால் தனது ஆட்டத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். மீதமுள்ள போட்டி இன்று தொடங்கிய நிலையில், ரயில்வே அணியை வீழ்த்தி டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 

விராட் கோலி பகிர்ந்த அதிர்ச்சி செய்தி

இந்த நிலையில்தான் சக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குடன் விராட் கோலி பகிர்ந்து கொண்ட பேட்டி வெளியாகி இருக்கிறது. கோலி தனது ஆராம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில அதிர்ச்சிகரனமான சம்பவங்களை பகிர்ந்து உள்ளார். 

மேலும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற செய்த பெரிய மோசடி? இங்கிலாந்து அணி அதிருப்தி

அவர் கூறுகையில், நான் அண்டர் 14 டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, சில சிக்கல்கள் காரணமாக நள்ளிரவு 1 மணிக்கு என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். மாநில அளவில் நடக்கும் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில காரணமாக (லட்சம்) என்னை நீக்கி விட்டு வேறு ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். 

லஞ்சம் கொடுக்க மறுத்த விராட் கோலி தந்தை

அப்போது என் தந்தை பணம் கொடுத்தால் இரண்டு போட்டிகளுக்கு பிறகு என்னை அணியில் சேர்க்கலாம் என கூறப்பட்டது. ஆனால் என் தந்தை, அவனை விளையாட வைக்க ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். முடிந்தால் விளையாடட்டும் இல்லையென்றால் அது அவனுக்கு விதிக்கப்படவில்லை என கூறினார். 

இச்சம்பவம் தனக்கு ஒரு திருப்புமுனையாகவும், தனது தந்தையின் செயல் குணம் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியாதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.   

மேலும் படிங்க: IND vs ENG: ஹர்திக் பாண்டியா செய்த புதிய சாதனை! இதுவரை யாரும் செய்ததில்லை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.