“பழங்குடியினர் நலத்துறையைப் பிராமணர்கள், நாயுடுக்கள் போன்ற உயர் பிரிவினர் நிர்வகிக்க வேண்டும்” என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு நேற்று சுரேஷ் கோபி பா.ஜ.க-வை ஆதரித்து டெல்லியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக ஒரு பழங்குடியினர்தான் இருக்க வேண்டும் என்பது நம் நாட்டின் சாபம். இந்தத் துறையைப் பழங்குடியினர் அல்லாத பிராமணர், நாயுடு உள்ளிட்ட உயர் வகுப்பினர் நிர்வகிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவும், எதிர்பார்ப்பும். அப்போதுதான் அத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும்.
இதேபோல, உயர் பிரிவு துறையைப் பழங்குடியினர் நிர்வகிக்க வேண்டும். இப்படி ஒரு மாற்றம் நமது ஜனநாயக நாட்டில் நடக்க வேண்டும். எனக்குப் பழங்குடியினர் நலத்துறையை நிர்வகிக்க வேண்டும் என்பது ஆசை. இதுகுறித்து பிரதமர் மோடியுடனும் பேசினேன். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை” என்று பேசினார்.
சுரேஷ் கோபியின் கருத்து பழங்குடியினருக்கு எதிராக உள்ளது என நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. இவரைப் பதவி விலகச் சொல்லிக் குரல்களும் எழுந்து வருகின்றன.
இதற்குத் தற்போது விளக்கமளித்துள்ள சுரேஷ் கோபி, “தற்போதுள்ள அமைப்பு மாற வேண்டும் என்றுதான் கூறினேன். ஆனால், அது திரிக்கப்பட்டுள்ளது. என்னுடைய பேச்சை வைத்து பட்ஜெட் மற்றும் அதன் அறிவிப்புகளை மறைக்கப் பார்க்கின்றனர். என்னுடைய பேச்சு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை நான் திரும்பப்பெறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs