Ramya Pandian: "அவன் எப்பொழுதும் என் 6 அடி குழந்தைதான்..!" – தம்பி திருமணம் குறித்து ரம்யா பாண்டியன்

2015-ல் வெளியான ‘டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். 2016-ல் ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும், மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்த இவர், குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்தார். சமீபத்தில், யோகா பயிற்சி மாஸ்டர் லவால் தவான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

மணமக்களுடன் ரம்யா பாண்டியன்
மணமக்களுடன் ரம்யா பாண்டியன்

தற்போது ரம்யா பாண்டியரின் சகோதரர் பரசு பாண்டியனின் திருமண நடைபெற்றிருக்கிறது. அதைக் குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் தம்பி பரசு பண்டியன் திருமணம் செய்துகொண்டான். ஆனால் அவன் எப்பொழுதும் என் 6 அடி உயரக் குழந்தையாகத்தான் இருப்பான். நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.

அவன் எப்பொழுதும் ஒரு குழந்தைப்போலதான். அவனின் ஒவ்வொரு அடியிலும் எங்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறான். இப்போது உயர்ந்த மதிப்புள்ள மனிதனாக வளர்ந்துவிட்டான். அவனுடைய அழகான மனதுக்குக் கடவுள் மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையாக, அன்பான ஐஸ்வர்யாவைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். நம் ரத்தினத்துக்கு ஒரு தேவதை கிடைத்ததில் எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

குடும்பத்துடன் ரம்யா பாண்டியன்

ஐஸ்வர்யா, நாங்கள் உன்னை நேசிக்கிறோம். உன் குடும்பத்தை இன்னும் அதிகம் நேசிக்கிறோம். ஒரு பெரிய குடும்பமாகச் சேர்ந்து முடிவற்ற மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கக் காத்திருக்கிறோம். மனம் நிறைவாக இருக்கிறது. என் அன்பானவர்களுக்கு வாழ்நாள் முழுக்க அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.